/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
/
குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மாணவருக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : நவ 05, 2025 10:51 PM

கள்ளக்குறிச்சி: அண்ணாமலை பல்கலைக்கழக அளவிலான குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பிடித்த ஆர்.கே.எஸ்., கல்லுாரி மாணவரை கலெக்டர் பாராட்டினார்.
கடந்த சில தினங்களுக்கு முன் அண்ணாமலை பல்கலைகழகத்திற்குட்பட்ட கல்லுாரி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி நடந்தது.
இதில், கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் மூன்றாமாண்டு பயிலும் மாணவர் சக்திநாயகம், 60 - 65 கிலோ எடை பிரிவில் முதலிடத்தை பிடித்து தங்க பதக்கத்தை வென்றார். மேலும், அடுத்த கட்டமாக ஹரியானா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இதையடுத்து, கலெக்டர் பிரசாந்த் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் சக்திவிநாயகத்தை பாராட்டி வாழ்த்தினார்.