/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தடகள போட்டியில் மாநில அளவில் சாதித்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு
/
தடகள போட்டியில் மாநில அளவில் சாதித்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு
தடகள போட்டியில் மாநில அளவில் சாதித்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு
தடகள போட்டியில் மாநில அளவில் சாதித்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு
ADDED : நவ 05, 2025 10:50 PM

சங்கராபுரம்: தடகளப் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று இரண்டாமிடம் பிடித்து சாதித்த மாணவிக்கு சங்கராபுரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை மகள் நித்திஸ்வரி,16; இவர் சங்கராபுரம் நியூபவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது தந்தை சமையலறாக வேலை செய்து வருகிறார்.
சிறு வயதில் இருந்தே நித்திஸ்வரி விளையாட்டில் ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மாநில அளவிலான தடகள போட் டி தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்தது. அதில் மாணவி நித்திஸ்வரி வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.
தொடர்ந்து இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தின் சார்பில் ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதனை கொண்டாடும் விதமாக சங்கராபுரம் நியூ பவர் பள்ளி நிர்வாகம் மற்றும் பொது சேவை அமைப்புகள் ஒன்றினைந்து மாணவி நித்திஸ்வரிக்கு மாலை அணிவித்து சங்கராபுரத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
உதயசூரியன் எம்.எல்.ஏ., பங்கேற்று மாணவியை வாழ்த்தினார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஆட்டம், பாட்டம் என மேளதாங்கள் முழுங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
சாதனை மாணவி நித்திஸ்வரி கூறுகையில்; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடகள விளையாட்டுப் போட்டியில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று தேசிய அளவிலான போட்டியில் தகுதி பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்கள் இனிவரும் காலங்களில் மாநில அளவிலான மற்றும் தேசிய அளவிலான போட்டியில் தடம் பதிக்க வேண்டும்.
இதற்கு உறுதுணையாக இருந்தத மிழ்நாடு அரசு, விளையாட்டு துறை அமைச்சகம் மற்றும் சங்கராபுரம் நியூ பவர் பள்ளி நிர்வாகம், தனது பெற்றோர்கள், சக ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

