ADDED : செப் 11, 2025 10:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; சங்கராபுரத்தில் முதல்வர் மருந்தகத்தை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் ஆய்வு செய்தார்.
அப்போது, அதிகளவு விற்பனையாகும் மருந்து, மாத்திரைகளின் விபரங்கள், போதுமான அளவு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா எனவும், மருந்து வாங்க வருபவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.
திருக்கோவிலுார் நகர வங்கி கூட்டுறவு கிளை, சங்கராபுரத்தில் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, துணைப்பதிவாளர்கள் சுகந்தலதா, விஜயகுமாரி, சங்கராபுரம் களஅலுவலர் வேல்முருகன், துணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் சவிதாராஜ், திருக்கோவிலுார் நகர வங்கி பொது மேலாளர் பிரபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.