ADDED : செப் 11, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; மேலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய கண்தான இருவார விழா நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர்கள் சுரேஷ், அகத்தியா முன்னிலை வகித்தனர். வட்டார கண் மருத்துவ உதவியாளர் ஷகிலா கண் பராமரிப்பு குறித்து பேசினார். தொடர்ந்து, கண் தானம் அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்டோர் கண் தானம் செய்ய விருப்பம் தெரிவித்து, தங்களது விபரங்களை பதிவு செய்தனர். விழாவில் செவிலியர்கள் தேவகி, வெண்ணிலா, சசி மற்றும் பலர் பங்கேற்றனர்.