/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்ட குழந்தை; சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
/
சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்ட குழந்தை; சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்ட குழந்தை; சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்ட குழந்தை; சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
ADDED : நவ 23, 2025 04:39 AM
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே சுடுதண்ணீர் ஊற்றிக்கொண்டதால் படுகாயமடைந்த இரண்டரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த கண்டாச்சிமங்கலத்தை சேர்ந்தவர் சதீஷ். இவரது இரண்டரை வயது மகன் மோனிஷ். கடந்த 15ம் தேதி மோனிஷ் வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது, தாய் மங்கையற்கரசி மோனிஷ் குளிப்பதற்காக சுடு தண்ணீர் எடுத்து வந்து வீட்டிற்கு வெளியே வைத்துள்ளார்.
தண்ணீர் அதிகளவு சூடாக இருந்தால், குளிந்த் தண்ணீர் கொண்டுவர மங்கையற்கரசி வீட்டிற்குள் சென்றார். அப்போது, வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மோனிஷ், தனக்கு குளிப்பதிற்கு தண்ணீர் வைத்திருப்பதாக நினைத்து தன் மீது சுடு தண்ணீரை ஊற்றிக் கொண்டு அலறினார். அவரது பெற்றோர் ஓடி வந்து குழந்தையை மீட்டனர். இதனால் மோனிஷிற்கு 80 சதவீத காயம் ஏற்பட்டது.
மீட்கப்பட்ட குழந்தையை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மற்றும் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோனிஷ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

