/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலம் அரசு ஆண்கள் பள்ளி பவள விழா
/
சின்னசேலம் அரசு ஆண்கள் பள்ளி பவள விழா
ADDED : ஆக 18, 2025 12:30 AM

சின்னசேலம்; சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 75ம் ஆண்டு பவள விழா நடந்தது.
உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சி.இ.ஓ., கார்த்திகா, பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ், துணை சேர்மன் ராகேஷ், உதவி திட்ட அலுவலர் மணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹசீனா முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் வேல்மணி வரவேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையக்குழு உறுப்பினர் தண்டபாணி, பட்டிமன்ற பேச்சாளர் இந்திரா விஜய லட்சுமி சிறப்புரையாற்றினர்.
முன்னாள் மாணவர் பாலமுருகன், வணிகர் சங்க தலைவர் ரவீந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழரசு, முன்னாள் மாணவர்கள் சுப்ரமணியன், பாண்டியன், ஆசிரியர்கள் சக்திவேல், பன்னீர்செல்வம், ஞானபிரகாசம் பேசினர். இதில் ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், நண்பர்கள் கால்பந்தாட்டக்குழு மணிவண்ணன், ரோட்டரி சங்க சிவக்குமார், முன்னாள் மாணவர் சிங்காரவேல் பங்கேற்றனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.