ADDED : ஆக 18, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்; சூளாங்குறிச்சியில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. காலை மூலவருக்கு சிறப்பு பூஜை, அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, கிருஷ்ணர், ராதை வேடமணிந்த குழந்தைகள் கோவிலுக்கு முன் நடனம் ஆடினர். மாலை 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறியடித்தனர். இரவு சிறப்பு அலங்கரத்தில் கிருஷ்ணர் சுவாமி வீதியுலா நடந்தது.