/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரு தரப்பு மோதல்: 4 பேர் கைது
/
இரு தரப்பு மோதல்: 4 பேர் கைது
ADDED : அக் 25, 2024 07:00 AM
ரிஷிவந்தியம்: பாசாரில் முன்விரோதம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் மணிகண்டன், 25; அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சரவணன்.
இருவருக்குமிடையே ஏரி புறம்போக்கு இடத்தை அனுபவிப்பது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. கடந்த 22ம் தேதி மணிகண்டன் அனுபவித்த இடத்தில் சரவணன் தரப்பினர் உழுத போது, இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து இரு தரப்பு புகாரின் பேரில், சரவணன்,41; முத்துசாமி, 62; அஜித், 26; மலர், 52; முத்து, 55; மணிகண்டன், அண்ணாதுரை மனைவி பாஞ்சாலை, முருகன் ஆகிய 8 பேர் மீது ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து, முத்துசாமி, அஜித், மலர், முத்து ஆகிய 4 பேரை கைது செய்தனர்.