ADDED : செப் 20, 2025 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் 'துாய்மை இயக்கம் 2.0' திட்ட துவக்க விழா நடந்தது.
தாசில்தார் வைரக்கண்ணன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். அலுவலக கழிவுகள் தனி தனியாக பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பேரூராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கப்பட்டது.
வருவாய் ஆய்வாளர் திவ்யா, வி.ஏ.ஓ.,குமார் மற்றும் அலுவல பணியாளர்கள் பங்கேற்றனர்.