/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகள் கலெக்டர் ஆய்வு
/
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகள் கலெக்டர் ஆய்வு
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகள் கலெக்டர் ஆய்வு
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப் பணிகள் கலெக்டர் ஆய்வு
ADDED : அக் 29, 2025 11:34 PM

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
மூரார்பாளையம் கிராமத்தில் கனவு இல்ல திட்ட வீடுகள், துாய்மை இந்தியா திட்ட சுகாதார வளாகக் கட்டட கட்டுமான பணி, ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மரம் நடும் பணிகள் நடந்து வருகிறது. சங்கராபுரம் வந்த கலெக்டர் பிரசாந்த், ஊராட்சி ஒன்றியத்தில் நடக்கும் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.
பூட்டை கிராமத்தில் நடக்கும் கனவு இல்லத் திட்ட வீட்டின் கட்டுமான பணி, முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகள், தேவபாண்டலம் கிராமத்தில் நிதிக்குழு மானியம் திட்ட சமுதாய வளாகக் கட்டட பணி, அ.பாண்டலம் சமுதாய சுகாதார வளாகக் கட்டுமானப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.