/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்., கட்சியினர் கண்டன ஊர்வலம்
/
தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்., கட்சியினர் கண்டன ஊர்வலம்
தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்., கட்சியினர் கண்டன ஊர்வலம்
தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்., கட்சியினர் கண்டன ஊர்வலம்
ADDED : ஆக 14, 2025 11:48 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை வரை நடந்த ஊர்வலத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, துரைராஜ், கவுன்சிலர் தேவராஜ், வழக்கறிஞர் ராஜ்மோகன், இளவரசன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார்.
ஊர்வலத்தில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் முறைகேடு செய்து பதவிக்கு வந்த மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மாவட்ட நிர்வாகிகள் அசோக், இதயத்துல்லா, ஆறுமுகம், வட்டார தலைவர்கள் கிருபானந்தம், பெரியசாமி, முனியப்பன், கலியமூர்த்தி, சரண்ராஜ், ஏழுமலை, சிக்கந்தர், பவானி, மாயஜோதி, அஞ்சலை, தனபால், கண்ணன், சுகுமார், சற்குரு, ஜெயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.