/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு வார விழா: ரூ.29.10 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கல்
/
கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு வார விழா: ரூ.29.10 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கல்
கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு வார விழா: ரூ.29.10 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கல்
கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு வார விழா: ரூ.29.10 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கல்
ADDED : நவ 18, 2025 07:31 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் வேலு 2,076 பயனாளிகளுக்கு 29.10 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் 'வெளிப்படை தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய மாநில கூட்டுறவு கொள்கை' தலைப்பில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்ணன், மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் அமைச்சர் வேலு சிறப்புரையாற்றினார். விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் விஜயசக்தி திட்ட விளக்க உரையாற்றினார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து, கூட்டுறவு தொடர்பான தலைப்புகளில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சிறந்த கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்கள், சிறப்பாக பணிபுரிந்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
மேலும், பயிர் கடன், கால்நடை பராமரிப்பு, மகளிர் சுய உதவிக்குழு கடன் என 2,076 பயனாளிகளுக்கு 29 கோடியே 10 லட்சத்து 84 ஆயிரத்து 800 மதிப்பில் கடன்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் சப் கலெக்டர் ஆனந்தகுமார் சிங், மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், நகர மன்ற தலைவர் சுப்ராயலு, ஆர்.டி.ஓ., முருகன், ஒன்றிய சேர்மன்கள் அலமேலுஆறுமுகம், சத்தியமூர்த்தி, தாமோதரன், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர்கள் சாந்தி, சுகுந்தலதா, குறிஞ்சிமணவாளன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

