/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் தொகுதியில் தி.மு.க.,விற்கு ஈடுகொடுக்குமா அ.தி.மு.க.,
/
திருக்கோவிலுார் தொகுதியில் தி.மு.க.,விற்கு ஈடுகொடுக்குமா அ.தி.மு.க.,
திருக்கோவிலுார் தொகுதியில் தி.மு.க.,விற்கு ஈடுகொடுக்குமா அ.தி.மு.க.,
திருக்கோவிலுார் தொகுதியில் தி.மு.க.,விற்கு ஈடுகொடுக்குமா அ.தி.மு.க.,
ADDED : நவ 18, 2025 07:30 AM

தி ருக்கோவிலுார் தொகுதியில் கடந்த 2 முறையாக தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வென்ற பொன்முடி தற்போது அமைச்சர் பதவியை இழந்தாலும், அவரும், அவரது மகன் விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளரான கவுதம சிகாமணியும் இணைந்து கட்சிப் பணிகளை சுறுசுறுப்புடன் செய்து வருகின்றனர்.
பொன்முடி மீது எதிர் கட்சிகள் பல விமர்சனங்களை முன் வைத்தாலும் அதனை எல்லாம் சரி செய்து பி.எல்.ஏ.,-2 உள்ளிட்ட பொறுப்பாளர்களை நியமித்து கட்சிப் பணியாற்ற செய்து, தொகுதியில் அடிப்படையான பணிகளை செய்து முடித்துள்ளனர். ஆளும் கட்சி என்ற அந்தஸ்துடன் ஒன்றிய செயலாளர்களும் திமிர முடியாமல் ஒருமித்த தலைமையின் கீழ் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
தொகுதியில் பிரதான எதிர் கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.,வின் நிலைதான் என்னவென்று தெரியவில்லை. காரணம் தி.மு.க.,வில் இந்த தொகுதி விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மாவட்டத்தை பிரித்த அ.தி.மு.க., கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.,வின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கிறது. தி.மு.க., வில் பலமிக்க பொன்முடி அல்லது அவரது மகன் மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணிக்கு இணையாக அ.தி.மு.க., வில் யாராவது இருக்கின்றனரா என்றால் அது கேள்விக்குறிதான். அவர்களுக்கு இணையாக மாவட்ட செயலாளர் குமரகுருதான் உள்ளார்.
இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் என்பதால் திருக்கோவிலுார் தொகுதி விழுப்புரம் கள்ளக்குறிச்சி என இரண்டு மாவட்டத்திலும் இடம் பெறுவதால், எந்த மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவது என்ற குழப்பம் தனது அரசியல் பலத்தை பலவீனப்படுத்தி விடும் என நினைப்பார். அதனால் திருக்கோவிலுார் தொகுதியை குமரகுரு தேர்வு செய்ய மாட்டார் என்பது உடன்பிறப்புகளின் கூற்றாக உள்ளது.
எனவே திருக்கோவிலுார் தொகுதிக்கு அ.தி.மு.க., பலம் பொருந்திய வேட்பாளரை கண்டறிய வேண்டிய கட்டாயம் உள்ளது. அல்லது கூட்டணி கட்சிக்கு தொகுதியை விட்டுக் கொடுத்து விடவேண்டிய நிலைதான் ஏற்படும்.
திருக்கோவிலுார் தொகுதியை பொறுத்தவரை பொன்முடி மற்றும் ஆளும் அரசின் மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தியின் வாயிலாக நாம் வெற்றி பெற்று விடலாம் என அ.தி.மு.க., நினைத்தால் அது கனவாகவே இருக்கும்.
தி.மு.க.,விற்கு இணையாக அ.தி.மு.க., பணியாற்ற வேண்டிய கட்டாய சூழல்தான் தற்போதைய கள நிலவரம் என்கின்றனர் அரசியலை உற்று நோக்குபவர்கள்.

