நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில் 2 பசு மாடுகளை திருடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ரிஷிவந்தியம் குமரன் தெருவைச் சேர்ந்தவர் பாவாடை மகன் ஏழுமலை, 32; இவர், 5 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 28ம் தேதி வழக்கம்போல் மாடுகளை ஓம்சக்தி கோவிலுக்கு அருகே உள்ள கொட்டகையில் கட்டி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் 29ம் தேதி காலை கொட்டகைக்கு சென்று பார்த்த போது 2 பசு மாடுகள் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

