/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புத்தாக்க தொழில் தொடங்க முன்வருவோருக்கு மானியம்
/
புத்தாக்க தொழில் தொடங்க முன்வருவோருக்கு மானியம்
ADDED : நவ 02, 2025 11:26 PM
கள்ளக்குறிச்சி:  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புத்தாக்க தொழில் துவங்க மானியம் வழங்கப்படுகிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
வேளாண் சார்ந்த துறைகளான வேளாண் விற்பனை, வணிகம், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கால்நடைத்துறை போன்றவற்றில் புத்தாக்க நிறுவனங்களுக்கு தொழில் துவங்க முன்வருவோருக்கு மானியம் அளிக்கப்படுகிறது.
விண்ணப்பதாரர் இந்திய நாட்டைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனமாக இருக்க வேண்டும். நேரடியாக உண்ணக்கூடிய பொருட்களை தயார் செய்யும் புத்தாக்க நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெற தகுதியானவை அல்ல.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு ஒரு பிரிவுக்கு 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழிலை விரிவுபடுத்தி சந்தைப்படுத்த தேர்வு செய்யப்படும் புத்தாக்க நிறுவனத்துக்கு ஒரு பிரிவுக்கு 25 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது.
எனவே, இதில் பயன்பெற விரும்புவோர் www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் உள்ள வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

