/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஒன்றிணைவோம் விழிப்புணர்வு கூட்டம்
/
ஒன்றிணைவோம் விழிப்புணர்வு கூட்டம்
ADDED : நவ 02, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: ஏமப்பேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்றிணைவோம் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் நடந்த கூட்டத்திற்கு, சப் இன்ஸ்பெக்டர்கள் வசந்தா, பச்சையப்பன் தலைமை தாங்கினர்.
பள்ளி தலைமை ஆசிரியர் பாலுசாமி முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் பொன்னுசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பெண் குழந்தை பாதுகாப்பு, பாலியல் குற்ற தடுப்பு வழிமுறைகள், போதைப் பொருள் ஒழிப்பு, போக்குவரத்து விதிமுறை, குழந்தை திருமண தடை குறித்த விளக்கவுரை வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

