/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
/
ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம்
ADDED : நவ 02, 2025 11:26 PM

ரிஷிவந்தியம்: அத்தியூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
பயிற்சிக்கு, ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் சுமதி தலைமை தாங்கினார். வாணாபுரம் தாசில்தார் வெங்கடேசன் வரவேற்றார்.
தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தேவதாஸ் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் விதம் குறித்து பேசியதாவது:
தமிழகத்தில் கடைசியாக 2002ம் ஆண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போதைய நிலவரப்படி 1982ம் ஆண்டு பிறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். அந்த பட்டியலுடன் தற்போதுள்ள 2025ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் ஒப்பீடு செய்யப்படும். 2002ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் புதிதாக இணைந்த நபர்களின் குடும்ப உறுப்பினர் விபரங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் அல்லது ஓட்டுச்சாவடி முகவர்கள் சேகரித்து படிவத்தில் நிரப்ப வேண்டும்.
வெளி மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் ஏதேனும் ஒரு காரணத்திற்காக ரிஷிவந்தியம் தொகுதிக்கு வந்து வாக்காளராக சேர்ந்திருக்கலாம். இவர்களின், தாய், தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் எந்த மாநிலத்தில் வாக்காளராக உள்ளனர் என்ற விபரத்தை சேகரித்து, படிவத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.
அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி தகுந்த காரணம் கேட்டறியப்படும் ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் வாக்காளராக தொடரலாம். இல்லையெனில் பட்டியலில் இருந்து நீக்கப்படும். 2 இடங்களில் உள்ள வாக்காளர்கள், இறந்த வாக்காளர்கள் மற்றும் வேறு தொகுதிக்கு நிரந்தரமாக குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
வெவ்வேறு வரிசை எண்ணில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் 'மேப்பிங்' செய்து வரிசையாக ஒன்றிணைக்கப்படும். ஓட்டுச்சாவடி முகவர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர்களிடம் படிவம் நிரப்பி, அத்துடன் ஒப்புதல் படிவம் இணைத்து ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும். இவ்வாறு தேர்தல் பிரிவு துணை தாசில்தார் பேசினார்.
தி.மு.க., - அ.தி.மு.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுச் சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.

