/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கடை விற்பனையாளர் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
/
ரேஷன் கடை விற்பனையாளர் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
ADDED : நவ 02, 2025 11:26 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், சங்கராபுரம், ரிஷிவந்தியம் மற்றும் கல்வராயன்மலை ஆகிய 6 ஒன்றியங்களைச் சேர்ந்த ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மாதாந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், 3 மற்றும் 4ம் தேதி தாயுமானவர் திட்டத்தின் கீழ், 70 வயது மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று ரேஷன்பொருட்களை வழங்க வேண்டும்.
இதில், எவ்வித புகார்களும் இருக்கக் கூடாது. கடையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இருப்பில் உள்ள பொருட்கள் சரியான எண்ணிக்கையில் இருக்க வேண்டும். சாக்கு பைகளை அடுக்கி வைத்திருக்க வேண்டும்.
சரியான நேரத்திற்கு கடைக்கு வர வேண்டும். பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அப்போது, பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சுகந்தலதா, கண்காணிப்பாளர் ரகு, கூட்டுறவு சார்பதிவாளர்கள் சக்திவேல், மணிகண்டன், செல்வராசு, தமிழ்ச்செல்வி மற்றும் பலர் பங்கேற்றனர்.
அதேபோல், திருக்கோவிலுார் ஒன்றியத்தில் கூட்டுறவு நகர வங்கி மேலாண்மை இயக்குநர் விஜயகுமாரி தலைமையிலும், உளுந்துார்பேட்டை மற்றும் திருநாவலுார் ஒன்றியங்களில் திருக்கோவிலுார் சரக துணைப்பதிவாளர் குறிஞ்சி மணவாளன் தலைமையிலும் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

