UPDATED : நவ 04, 2026 12:02 PM
ADDED : நவ 04, 2026 11:57 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய அரசுகளை கண்டித்து மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்ட செயலாளர் மணி தலைமை தாங்கினார்.
மாவட்ட செயற்குழு சுப்ரமணியன், செயற்குழு தனலட்சுமி, தெய்வீகன், வட்டக்குழு நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய், வெங்காயம், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலையேற்றத்தை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர். மாவட்ட குழு அருள்தாஸ் நன்றி கூறினார்.
