/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தகன மேடை அலுவலக கட்டடம் திறப்பு விழா
/
தகன மேடை அலுவலக கட்டடம் திறப்பு விழா
ADDED : அக் 15, 2025 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் நவீன தகன மேடை வளாகத்தில் அலுவலக கட்டட திறப்பு விழா நடந்தது.
திருக்கோவிலுார் நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை, நகராட்சியுடன் இணைந்து நிர்வகிக்கும் பொறுப்பு திருக்கோவிலுார் ரோட்டரி சங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தகன மேடை வளாகத்தில் முக்தி தாமம் என்ற பெயரில் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. முக்தி அறக்கட்டளை தலைவர் வாசன் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். செயலாளர் காமராஜ், பொருளாளர் செந்தில்குமார், ரோட்டரி சங்க தலைவர் கோதம்சந்த், சங்க உறுப்பினர்கள் சரவணன், சாந்திபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.