/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
ADDED : அக் 15, 2025 06:13 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்த மணிவேல் மனைவி தேன்மொழி, 49; இவர் நேற்று காலை 10.30 மணிக்கு அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்றார்.
சிறிது நேரத்தில் திரும்பியபோது, அவரது வீட்டின் கதவு உடைத்து பீரோவில் இருந்த 11 கிராம் தங்க நகைகள், 450 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ. 66 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
திருடுபோன பொருட்கள் மதிப்பு ரூ. 2 லட்சம். இது குறித்து தேன்மொழி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.