ADDED : ஆக 04, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அடுத்த டி.கே.புதுமண்டபம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகள் ரூபிகா, 20; இவருக்கும் கடுவனுாரை சேர்ந்த சேகர் மகன் ராஜா, 27; இடையே 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக புதுமண்டபத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 31ம் தேதி காலை 11:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியில் சென்ற ரூபிகா மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தாய் ரங்கநாயகி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

