/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வளர்ச்சி திட்ட பணிகள் : கலெக்டர் ஆய்வு
/
வளர்ச்சி திட்ட பணிகள் : கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 22, 2025 10:10 PM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் பிரசாந் நேற்று ஆய்வு செய்தார்.
அதில் 1.17 கோடி ரூபாய் மதிப்பில் மரவானத்தம் நமச்சிவாயபுரம் - நாககுப்பம் சாலை மேம்பாட்டு பணி, 5.58 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பள்ளி வகுப்பறை புனரமைப்பு பணியை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார்.
தொடர்ந்து நாககுப்பம் ஊராட்சியில் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டின் கட்டுமான பணிகள், ஏர்வாய்ப்பட்டினம் ஊராட்சியில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் மையம் மற்றும் ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகளை ஆய்வு செய்தார்.
கனவு இல்ல திட்ட பயனாளிளுக்கான திட்ட தொகையினை விதிகளின்படி உடனுக்குடன் வழங்க வேண்டும். மரக்கன்றுகள் உற்பத்தி பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது பி.டி.ஓ.,க்கள் சவரிராஜ், சுமதி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.