/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்; கலெக்டர் துவக்கி வைப்பு
/
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்; கலெக்டர் துவக்கி வைப்பு
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்; கலெக்டர் துவக்கி வைப்பு
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள்; கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : அக் 28, 2025 05:52 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ். கல்லுாரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியினை கலெக்டர் துவக்கி வைத்தார்.
பள்ளி அளவிலான மற்றும் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நிறைவுற்ற நிலை யில் மாவட்ட அளவிலான போட்டிகள் தற்போது நடத்தப்பட்டு வரு கிறது.
நாளை 27ம் தேதி வரை நடக்கும் இப்போட்டிகளின் துவக்க விழா கள்ளக்குறிச்சி இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நேற்று நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் போட்டிகளை துவக்கி வைத்து பேசியதாவது; கலை போட்டிகளில் மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மாணவர்கள் கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகள், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு வகையில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் கலைத் திறனை வளர்த்திடவும், தனித்திறமைகளை ஊக்குவிக்கவும், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார். நிகழ்ச்சியில் சி.இ.ஓ., கார்த்திகா, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.