தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான செஸ் போட்டி

பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான செஸ் போட்டி

பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான செஸ் போட்டி


ADDED : ஜூலை 17, 2025 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2025 12:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 வட்டார அளவிலான செஸ் போட்டியில், 3 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் 11, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு நான்கு பிரிவுகளில் செஸ் போட்டி நடந்தது. அதில் முதல் இரு இடங்களை பிடித்த மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி மூரார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, சின்னசேலம் நைனார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, கல்வராயன்மலை மூலக்காடு அரசு மாதிரி பள்ளி மேல்நிலைப் பள்ளி, திருக்கோவிலுார் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஸ் போட்டி நடந்து வருகிறது.

அதேபோல் உளுந்துார்பேட்டை எறையூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி, திருநாவலுார் களமருதுார் அரசு மேல்நிலைப் பள்ளி, சங்கராபுரம் அரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி, ரிஷிவந்தியம் மணலுார்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

நைனார்பாளையம் அரசு பள்ளியில் நேற்று நடந்த வட்டார அளவிலான செஸ் போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் பாபு தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர்கள் பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் செந்தமிழ்செல்வி வரவேற்றார்.

மாவட்ட செஸ் அசோசேஷன் தலைவர் அன்பரசன், நடுவர் பழனி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனகராஜி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் லோகநாதன், தினகரன், ராஜா, பாலமுருகன், சாமிதுரை, ராஜேந்திரன், சிங்காரவேல் ஆகியோர் நடத்தினர். உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன் நன்றி கூறினார்.

வட்டார அளவிலான போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us