/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தி.மு.க., மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் நியமனம்
/
தி.மு.க., மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் நியமனம்
ADDED : அக் 01, 2025 12:52 AM

திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் நகர மன்ற உறுப்பினர் பூபதி, மாவட்ட தி.மு.க., தொழிலாளர் அணி அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருக்கோவிலுார் தொகுதி பொன்முடி எம்.எல்.ஏ., விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி ஆகியோரின் பரிந்துரையின் பேரில், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஏற்பாட்டில், திருக்கோவிலுார் நகராட்சி 14 வது வார்டு உறுப்பினர் பூபதியை விழுப்புரம் தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளராக நியமனம் செய்துள்ளார்.
இதனை அடுத்து பூபதி தனது ஆதரவாளர்களுடன் சென்று தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி ஆகியோரை சந்தித்து சால்வை அணிவித்து, வாழ்த்து பெற்று நன்றி தெரிவித்தார்.