ADDED : ஜன 20, 2025 04:13 AM
அ நிறம் | அளவு
சின்னசேலம் : கால் வலி தாங்காமல் களைக் கொல்லி மருந்தை குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சின்னசேலம் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்,75; காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கால் வலி அதிகமானது. அதில் விரக்தியடைந்த கணேசன், வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவரை, அவரது உறவினர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று அதிகாலை இறந்தார்.
சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
