/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மயான இடம் ஆக்கிரமிப்பு : மீட்டுத்தர வலியுறுத்தி மனு
/
மயான இடம் ஆக்கிரமிப்பு : மீட்டுத்தர வலியுறுத்தி மனு
மயான இடம் ஆக்கிரமிப்பு : மீட்டுத்தர வலியுறுத்தி மனு
மயான இடம் ஆக்கிரமிப்பு : மீட்டுத்தர வலியுறுத்தி மனு
ADDED : நவ 04, 2025 01:07 AM

கள்ளக்குறிச்சி:  வடமாமாந்துாரில் ஆக்கிரமிப்பில் உள்ள மயான இடத்தை மீட்டுத்தர வலியுறுத்தி அம்பேத்கர் எழுச்சி இயக்க நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:
வடமாமாந்துாரில் 180 குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஊரில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக 5 ஏக்கர் 30 சென்ட் பரப்பளவில் மயானம் உள்ளது. இதில் தற்போது 80 சென்ட் இடம் மட்டுமே மயானமாக உள்ளது.
மயானத்தை ஒட்டியவாறு நிலம் வைத்துள்ளவர்கள் மீதமுள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.
மயானமாக உள்ள 80 சென்ட் இடத்தில் அரசு சார்பில் கட்டப்பட்ட கழிவறை கட்டடமும் உள்ளது.
இதனால், இறந்தவர்களை அடக்கம் செய்ய போதிய இடமின்றி, ஏற்கனவே அடக்கம் செய்த இடத்திலேயே மீண்டும் அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மயானத்தின் இடத்தை அளக்க வேண்டும் என ஏற்கனவே இரண்டு முறை மனு அளித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் உள்ளனர். எனவே, மயானத்தை அளந்து, ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

