தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பட்டாசு தீப்பொறி விழுந்து 2 கூரை வீடுகள் சேதம்

பட்டாசு தீப்பொறி விழுந்து 2 கூரை வீடுகள் சேதம்

பட்டாசு தீப்பொறி விழுந்து 2 கூரை வீடுகள் சேதம்


UPDATED : நவ 10, 2026 10:35 AM

ADDED : நவ 10, 2026 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:35 AM ADDED : நவ 10, 2026 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் பட்டாசு வெடித்த போது தீப்பொறி விழுந்து 2 கூரை வீடுகள் தீ பிடித்து எரிந்தன.

கள்ளக்குறிச்சி அடுத்த ஏர்வாய்ப்பட்டினத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி பிரபா, 40; நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் பட்டாசு வெடித்த போது எதிர்பாராத விதமாக இவரது கூரை வீடு மீது தீப்பொறி விழுந்தது. இதனால், கூரை தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர்.

அதேபோல், நேற்று முன்தினம் இரவு பட்டாசு வெடித்த போது தீப்பொறி விழுந்து கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையைச் சேர்ந்த நாகப்பன் மனைவி தமிழரசி என்பவரது கூரை வீடும் தீ பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இந்த 2 தீ விபத்துக்களிலும் வீட்டின் ஒரு பகுதி கூரை எரிந்து சேதமடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us