/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ள பெருக்கு
/
பெரியார் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ள பெருக்கு
ADDED : அக் 21, 2025 09:31 PM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் பெய்த தொடர் மழை காரணமாக பெரியார் நீர் வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கச்சிராயபாளையம் மற்றும் கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கல்வராயன் மலையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளான ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள கவியம், சிறுகலுார், பெரியார் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்வராயன் மலையில் பெய்த தொடர் மழை காரணமாக சாலையில் ராட்சச பாறை உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.