/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு போர்க் லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி
/
தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு போர்க் லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி
தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு போர்க் லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி
தாட்கோ மூலம் இளைஞர்களுக்கு போர்க் லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி
ADDED : ஆக 20, 2025 10:47 PM
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு போர்க் லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு போர்க் லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களில் போர்க் லிப்ட் ஆப்பரேட்டர்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது.
பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள்ளும் இருக்க வேண்டும். 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாகவும், குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.
பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, கலெக்டர் அலுவலகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.