நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் ரோட்டரி சார்பில் கோலப்போட்டி நடந்தது.
ரோட்டரி மண்டபத்தில் நடந்த போட்டிக்கு, ரோட்டரி தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் கோபிநாத், முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன், முத்துக் கருப்பன், சுதாகரன், துணை ஆளுனர் வெங்கடேசன், மணிவண்ணன், அசோக் முன்னிலை வகித்தனர். கோலப்போட்டியில் 45 பேர் பங்கேற்றனர். நடுவர் குழு முதல் 3 பரிசுக்கான கோலத்தை தேர்ந்தெடுத்தனர்.
இதில் முதல் பரிசாக பட்டுப்புடவை, இரண்டாம் பரிசாக வெள்ளி குத்து விளக்கு, முன்றாம் பரிசாக வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு பரிசாக வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.

