நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் சிறப்பு குறைகேட்பு முகாம் நடந்தது.
தச்சூர் ஆக்சாலிஸ் சர்வதேச பள்ளி வளாகத்தில் நடந்த முகாமிற்கு, திருச்சி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முதன்மை மண்டல ஆணையர் முருகவேல் தலைமை தாங்கி, விண்ணப்பங்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
இதில் 50க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களை குறைகளைத் தெரிவித்தனர். 25 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 16 விண்ணப்பங்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.