ADDED : நவ 18, 2026 08:24 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விற்பனைக்காக ஹான்ஸ் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி சப்–இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் இன்று (நவ.,18) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோட்டைமேட்டில் ராதாகிருஷ்ணன் மகன் ரமேஷ்,60; என்பவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, ரமேஷை கைது செய்து, அவரிடமிருந்த ரூ.400 மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
