/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
/
கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 20, 2025 05:38 AM
கள்ளக்குறிச்சி: பெண்கள் மீதான வன்கொடுமை தாக்குதல்களை தடுக்க தவறியதாக பா.ஜ., அரசை கண்டித்து கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்திய கம்யூ., மாவட்டக்குழு செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
தலித் மக்கள் மீதான தாக்குதல்கள், பழங்குடியின மக்கள், பெண்கள் மீதும் வன்கொடுமை தாக்குதல்கள் தடுக்க தவறியதாக பா.ஜ., அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் பாரதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

