/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இரும்பு கம்பி திருடியவர் கைது
/
இரும்பு கம்பி திருடியவர் கைது
ADDED : ஜூலை 21, 2025 06:42 AM
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அருகே சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பு கம்பியை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையோரத்தில் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பிகளை உடைத்து, டாடா ஏஸ் மினி வேனில் ஏற்றி செல்வதாக தகவல் கிடைத்தது.
சாலை பணியாளர் பத்மநாபன் மற்றும் சிலர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது, இரும்பு கம்பிகளை உடைத்து வாகனத்தில் ஏற்றிய நபரை பிடித்து ரிஷிவந்தியம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிப்பட்ட நபர் பாக்கம் புதுார் ராஜமாணிக்கம் மகன் அன்பழகன், 42; என்பதும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள இரும்பு தடுப்பு கம்பிகளை திருடியது தெரியவந்தது. அன்பழகனை கைது செய்து, திருட்டுக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.