ADDED : நவ 21, 2026 05:13 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு ஜீயர் சுவாமிகள் பிரம்மரத வீதியுலா நடந்தது.
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் கைசீக ஏகாதசியை முன்னிட்டு பிரம்மரத விழா நேற்று (நவ.,20) துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (நவ.,21) அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவர் விஸ்வரூப தரிசனம், 4:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீசபெருமாள் பாண்டிய மண்டபத்தில் எழுந்தருளி விசேஷ பூஜைகள், ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரியார் கைசிக புராணம் வாசித்தார்.
தொடர்ந்து 8:00 மணிக்கு பிரம்ம ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
