/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி விழா
/
உலகளந்த பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி விழா
ADDED : டிச 01, 2025 05:04 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் கைசிக ஏகாதசி விழா இரண்டு நாட்கள் நடக்கிறது.
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில், கைசிக ஏகாதசியை முன்னிட்டு இன்று (1ம் தேதி) காலை 8:00 மணிக்கு பஞ்ச சம்ஸ்காரம், பக்தர்களுக்கு சமாஸ்ரயணம் செய்து வைக்கும் வைபவம் நடக்கிறது.
மாலை 3:00 மணிக்கு உபன்யாசம், இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் வீதியுலா நடக்கிறது.
நாளை அதிகாலை 5:00 மணிக்கு ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் மூலஸ்தானத்தில் கைசிக புராணம் வாசிக்கும் வைபவம், தொடர்ந்து 7:30 மணிக்கு பிரம்ம ரதத்தில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் ஏஜென்ட் கோலாகலன் செய்து வருகிறார்.

