ADDED : நவ 05, 2025 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: லட்சியம் கிராமத்தில் இரண்டு பெண்களை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த லட்சியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாஜலபதி மனைவி பானுப்பிரியா, 33; இவரது தங்கை சத்யா, 24; தீபாவளி பண்டிகைகாக சத்யா தனது சகோதரி பானுப்பிரியா விட்டிற்கு வந்து தங்கினார்.
கடந்த 31ம் இரவு 8:00 மணிக்கு பானுப்பிரியா வீட்டிற்கு வந்த சத்யாவின் கணவர் காளியாப்பிள்ளை, 35; தகராறு செய்து சகோதரிகள் இருவரையும் கட்டையால் கடுமையாக தாக்கினார். இதில் பானுப்பிரியா, சத்யா இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து, காளியாப்பிள்ளையை கைது செய்தனர்.

