ADDED : நவ 05, 2025 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வடக்கு நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் பரசுராமன், 26; நேற்று முன்தினம் இரவு 11:50 மணிக்கு பைக்கில் திருவெண்ணைநல்லுார் நோக்கி சென்றார்.
சுந்தரேசபுரம் முருகர் கோவில் அருகே சென்றபோது, எதிரில் வந்த டாட்டா ஏஸ் வேன் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பரசுராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ஐஸ்வர்யா, 19; கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் டாட்டா ஏஸ் வேன் ஓட்டிச் சென்ற மர்ம நபர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

