UPDATED : நவ 10, 2026 03:45 AM
ADDED : நவ 09, 2026 04:52 PM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவர் இறந்தார்.
சின்னசேலம் அடுத்த பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் பிரவீன்குமார், 29; இவர், கடந்த 2ம் தேதி இரவு ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சின்னசேலத்திற்கு சென்றார்.
சின்னசேலம் ரைஸ்மில் அருகே சென்ற போது நிலைதடுமாறி ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடன், சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
