/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
காணாமல் போன முதியவர் உடல் கிணற்றில் மீட்பு
/
காணாமல் போன முதியவர் உடல் கிணற்றில் மீட்பு
ADDED : மார் 15, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த கீழத்தாழனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன், 60; இவரை கடந்த 10ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை அரும்பாக்கம், டாஸ்மாக் கடை அருகே உள்ள தரை கிணற்றில் ஜெயராமன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.
திருக்கோவிலுார் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கிணற்றில் இருந்து உடலை மீட்டனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

