ADDED : நவ 10, 2026 03:27 PM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் ஜவுளிகடையில் தவற விட்ட ரொக்கம் ரு.36,000 மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
சங்கராபுரம் அடுத்த பொய்குனம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் மனைவி கலையரசி 45. இவர் நேற்று முன் 7 ம் தேதி சங்கராபுரத்தில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு துணி வாங்க சென்றார்.
அப்போது கையில் வைத்திருந்த யையை கடையில் தவறவிட்டது.சிறது நேரம் கழித்து தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து கலையரசி புகாரில் பேரில் சங்கராபுரம் போலீசார் ஜவுளி கடையில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.
சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் திருப்பதி, 50 ;என்பவர் ஜவுளிகடையில் கலைச்செல்வியின் கைப்பையை எடுத்தது தெரியவந்தது.
சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் ஊராங்காணி சென்று திருப்பதியிடமிருந்து ரு.36,000 ரொக்கம் மற்றும் மொபைல்போன் ஆகியவற்றை கைபற்றி அதனை கலையிரசியிடம் ஒப்படைத்தனர்.
