/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்
/
முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 19, 2025 06:41 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஹஜ் பயணிகளுக்காக சேவையாற்றும் வகையில் சவூதி அரேபியா செல்ல ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
சவூதி அரேபியாவிற்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்நாட்டைச் சார்ந்த பயணிகளுக்காக சேவையாற்ற மாநில ஹஜ் ஆய்வாளர்கள் தற்காலிகமாக சவூதி அரேபியா அனுப்பபட உள்ளனர். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான தற்காலிக பணிக்காலம் வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், துணை ராணுவ படைகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகள், மத்திய மாநில அரசின் கீழ் இயங்கும் பொது நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.
மாநில ஹஜ் ஆய்வாளர்கள் சவூதி அரேபியாவில் பணிபுரியும் காலம் பணிக்காலமாக கருதப்படும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இப்பணிக்காக விண்ணப்பிக்கும் முறை, தகுதி, நியமன முறை ஆகியவை மும்பை இந்திய ஹஜ் குழுவின் இணைய முகவரியான www.hajcommittee.gov.in அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

