/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேசிய திறனறி தேர்வு: 85 மாணவர்கள் தேர்ச்சி
/
தேசிய திறனறி தேர்வு: 85 மாணவர்கள் தேர்ச்சி
ADDED : மார் 04, 2024 12:21 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த தேசிய திறனறி தேர்வில் 85 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
அரசு பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.
மாணவ, மாணவிகள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, 9 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றால் மாதம் தோறும் 1,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
அதன்படி, 48 மாதங்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
நடப்பு கல்வியாண்டில் தேசிய திறனறி தேர்வெழுத 7,768 பேர் விண்ணப்பித்தனர். கடந்த மாதம் 3ம் தேதி நடந்த தேர்வில், 7,572 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். 196 பேர் தேர்வெழுதவில்லை. தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.
அதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 85 பேர் தேசிய தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக, செம்பாக்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 8 மாணவர்கள் தேர்ச்சி பெற்று எண்ணிக்கையில் மாவட்ட அளவில் முதலிடத்தைப் பிடித்தனர்.
கள்ளக்குறிச்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இரண்டாமிடத்தையும், தியாகதுருகம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரியலுார் கஸ்துாரிபா காந்தி பாலிக வித்யாலயா மற்றும் சூளாங்குறிச்சி நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த தலா 3 மாணவர்கள் தேர்ச்சி பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

