தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

 பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்

 பணி நிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்


ADDED : டிச 21, 2025 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2025 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவனையில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எம்.ஆர்.பி., செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர். ஆனாலும், எம்.ஆர்.பி., செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க மாநில நிர்வாகிகளிடம் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி, எம்.ஆர்.பி., செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் எம்.ஆர்.பி., செவிலியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us