UPDATED : நவ 04, 2026 12:02 PM
ADDED : நவ 04, 2026 11:57 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் செவிலியர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு கிராம, பகுதி, சமுதாய, சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் சுசீலா தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் சாந்தி, செயலாளர் தெேரசா, பொருளாளர் சுந்தரி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் ஜெயந்தி, ஜோதி இருதய மேரி கண்டன உரையாற் றினர்.
ஆர்ப்பாட்டத்தில், கிராம பகுதி, சமுதாய, சுகாதார செவிலியர்கள் செய்து வரும் தாய் சேய் நலம், குடும்ப நலம், வளரிளம் பருவத்தினர் நலம், தொற்று நோய் பணிகளை செய்து வருவதாக சமூக ஊடகங்களில் பேட்டி அளித்து வரும் இடைநிலை சுகாதார பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
நிலுவையில் உள்ள கோரிக்கைகளை உடன் நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட பொருளாளர் குர்ஷால் நன்றி கூறினார்.
