UPDATED : நவ 04, 2026 12:02 PM
ADDED : நவ 04, 2026 11:57 AM

அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விலைவாசி உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., சார் பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் கலியபெருமாள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர் தமிழ்நாடு கரும்பு உற்பத்தியாளர் சங்க மாநிலத் தலைவர் சரவணன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருப்பதை கண்டித்தும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் பேசினர்.
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், சிவக்குமார், கஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
