தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/டிரான்ஸ்பார்மர் பழுதனதால் நெற்பயிர்கள் காயும் அவலம்

டிரான்ஸ்பார்மர் பழுதனதால் நெற்பயிர்கள் காயும் அவலம்

டிரான்ஸ்பார்மர் பழுதனதால் நெற்பயிர்கள் காயும் அவலம்


UPDATED : அக் 31, 2026 07:21 PM

ADDED : அக் 31, 2026 07:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 07:21 PM ADDED : அக் 31, 2026 07:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த கூவனூரில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் 20க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்கள் இயங்காமல் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருக்கோவிலுார் அடுத்த கூவனுாரில் தென்பெண்ணை ஆற்றையொட்டி, விவசாய மின் மோட்டார்களுக்குச் செல்லும் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் கடந்த 24 ம் தேதி பழுதானது.

இதன் காரணமாக 20க்கும் மேற்பட்ட விவசாய மின் மோட்டார்களின் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. அதேபோல் ஆற்றில் இருந்து ஊருக்கு செல்லும் குடிநீர் மோட்டார் இயங்காத சூழல் ஏற்பட்டது.

இது குறித்து திருக்கோவிலுார் மின்வாரிய அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேரில் புகார் அளித்தனர். மின்மோட்டார் இயங்குவதற்கு மட்டும் மாற்று ஏற்பாடுகளை செய்த மின்வாரிய ஊழியர்கள் விவசாய மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் மேற்கொண்டுள்ள பல விவசாயிகளின் நெல் நடவு பயிர் காயத் துவங்கியுள்ளது.

மேலும் சிலர் நடவு செய்வதற்காக தயார் செய்த நிலமும் காய்ந்து நடவு பணியை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர்.

பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக மாற்ற வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us