UPDATED : அக் 24, 2026 01:10 AM
ADDED : அக் 24, 2026 01:08 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி – கச்சிராயபாளையம் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலங்கள் மற்றும் வங்கிகள் உள்ளன. இதனால், வேலைகளுக்காக பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
கடந்த ஓராண்டிற்கு முன் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையின் இருபுறமும் இருந்த பயணிகள் நிழற்குடை இடித்து அகற்றப்பட்டது. சாலை பணி முடிந்த நிலையில் அப்பகுதியில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, மார்க்கெட் கமிட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குகடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
